விஜய் உடன் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி அமர்ந்துள்ளார் – அ.தி.மு.க விமர்சனம்
தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செல்வகுமார், “தேர்தல் கேம்பைனில் 26-ஆம் தேதி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கொட்டிகாமலை அசோக் என்பவர் தேடப்பட்ட குற்றவாளி. இவர் முதல்வர் விஜய், தாராபுரம் பரப்புரையின் போது அவரை வைத்து மாட்டு வண்டி ஓட்டுகிறார்.
விஜய் வசம் காவல்துறை உள்ளது. இந்த துறையால் தேடப்பட்டு வரும் குற்றவாளியை அவர் அருகிலேயே வைத்துள்ளார். இது தூய சக்தி ஆட்சியா? இல்லை தீய சக்தி ஆட்சியா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. ஏன் அவர் கைது செய்யப்படவில்லை. அப்படி என்றால் இது பொய் வழக்கா?” என்று கேள்வி எழுப்பினார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




