--- --:--:-- --

சென்னை கோட்டத்தில் 16 புதிய சுரங்கப் பாதைகள் அமைப்பு

11

சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதைகளை கடந்து செல்லும் 16 ரயில்வே கேட் பாதைகள், கடந்த ஏப்ரல் 2025 முதல் சுரங்கப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதில், 2025-26 நிதியாண்டில் 11 சுரங்கப் பாதைகளும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 5 சுரங்கப் பாதைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

 

ஒவ்வொரு சுரங்கப்பாதையும் தலா ரூ. 8 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் அதிக பணிகள் சென்னை ரயில்வே கோட்டத்தில் முடிக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுரங்கப்பாதைகள் அரக்கோணம் – ஜோலார்பேட்டை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளன.

 

இதில், சேவூர் – காட்பாடி, லத்தேரி – காவனூர், குடியாத்தம் – வளத்தூர், ஜோலார்பேட்டை – சோமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ரயில்வே கேட் பாதைகளுக்கு மாற்றாக சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரயில் வரும் நேரத்துக்காக ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறையும். மேலும், ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படும் நேரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும்.

 

 

நடப்பு 2026-27 நிதியாண்டில் சித்தேரி – மகேந்திரவாடி, காட்பாடி – லத்தேரி, ஆரம்பாக்கம் – தடா, எளவூர் – ஆரம்பாக்கம், மற்றும் கடம்பத்தூர் – திருவாலங்காடு ஆகிய 5 பகுதிகளிலும் ரயில்வே கேட் பாதைகள் அகற்றப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் வண்ணாரப்பேட்டை – கொருக்குப்பேட்டை இடையேயும், எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் பேரணி – விக்கிரவாண்டி இடையேயும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

 

 

மேலும் 3 சுரங்கப்பாதைகள் கட்டுமானத்தில் சென்னை ரயில்வே கோட்டத்தில் மேலும் 3 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவை:லத்தேரி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே கேட் எண் 57. திருவள்ளூர் – கடம்பத்தூர் இடையே உள்ள ரயில்வே கேட் எண் 20. திருவாலங்காடு – அரக்கோணம் இடையே உள்ள ரயில்வே கேட் எண் 28

 

 

இந்த மூன்று சுரங்கப்பாதைகளையும் 2027 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்துக்கும் சுமார் ரூ.8 கோடி செலவாகும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே கேட்களுக்கு பதிலாக சுரங்கப்பாதைகள் அமைப்பதன் மூலம் ரயில் பாதையை கடக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், ரயில்வே கேட்களில் ஏற்படும் காத்திருப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon