நியூயார்க்கில் மோடி உலகத் தலைவர்களுடன் சந்திப்பு

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரையை பல நாட்டு தலைவர்களும் ஆர்வத்துடன் கேட்டனர். இந்த மாநாட்டில் பிற நாட்டு தலைவர்கள் உரையாற்றிய போது வராத அமெரிக்க அதிபர் பிரதமர் மோடி பேசும்போது மட்டும் வந்திருந்தார். மோடிக்கு பின்னர் ஜெர்மனி நாட்டு பிரதமர் பேசும் வரை அமர்ந்து இருந்த அவர் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

 

ஐநா சபை கூட்டத்திற்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெர்மனி பிரதமர் உடனும்., இத்தாலி பிரதமர் உடனும், கத்தார் மன்னர், கொலம்பிய அதிபர், நைஜீரிய அதிபர், நமீபியா அதிபர், மாலத்தீவு அதிபர், பூட்டான் பிரதமர், நெதர்லாந்து பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து வர்த்தகம் முதலீடு குறித்த பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் அமைப்பின் செயல் இயக்குனர் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியாவில் குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்காக அரசு எடுத்த நடவடிக்கை களை மூடி சுட்டிக்காட்டினார். நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பலப்படுத்துவது குறித்து தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி நமக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் மிகச் சிறந்த நண்பர் என்றும் இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்று குறிப்பிட்டார். பின்னர் பேசிய டிரம்ப் இந்தியாவுடனான உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளித்தது என்ற பேச்சு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த இதுகுறித்து இந்திய பிரதமர் கவனத்தில் கொள்வார் என்றார்.


Leave a Reply