ஒரே இடத்தில் 5,000 மாணவர்கள் கூடி புத்தகம் வாசித்து சாதனை படைத்தனர்

மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஓசூரில் ஐந்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்து சாதனை புரிந்தனர். கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஓசூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் எட்டாவது புத்தக திருவிழா வரும் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. 70 அரங்கங்களில் கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறும் இந்த கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

 

இந்த நிலையில் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஐந்தாயிரம் மாணவர்கள் ஒன்று கூடி புத்தகம் வாசித்து சாதனை படைத்தனர். திருக்குறள், புகழ் பெற்ற அறிஞர்களின் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் என தொடர்ந்து வாசித்த மாணவர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


Leave a Reply