--- --:--:-- --

கோவை மாணவர் தற்கொலை – காவல்துறை விளக்கம்

9

பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை சம்பவத்தில் கோவை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகார் அளிக்கப்பட்ட அன்றே வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது. சாதிய ரீதியாக துன்புறுத்தியதாக 2 சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் இரு சிறுவர்களும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதி.

 

 

சக மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 30 பேரிடம் விசாரணை. துணை ஆணையர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் அகிலன் தற்கொலை சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடக்கிறது. தவறான தகவல்கள், வதந்திகளை பரப்ப வேண்டாம். பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் முக்கிய தடயங்கள் கிடைக்க வாய்ப்பு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon