விருதுநகரில் திருநங்கயை காதலித்து மணந்த இளைஞர்..!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இளைஞர் ஒருவர் பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்து கொண்டார். வளையகுளத்தை சேர்ந்த திருநங்கை ஹரினா, கருப்பசாமி ஆகியோர் கடந்த ஓராண்டாக காதலர்கள் இருவரும் தங்கள் காதலை பெற்றோரிடம் கூறியபோது முதலில் எதிர்ப்பு கிளம்பியது.
பின்னர் சம்மதிக்க வைத்து பெற்றோர் முன்னிலையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஹரினா, கருப்பசாமி தம்பதிக்கு பெற்றோர் உறவினர்கள் அந்த பகுதியினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.






