--- --:--:-- --

முககவசம் அணியாத புதுமண தம்பதிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்…!

5

சென்னை அடுத்த திருவேற்காடு அருகே கோவிலுக்கு முக கவசம் அணியாமல் வந்த புதுமண தம்பதிக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கருமாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நெறிமுறைகளை பின்பற்றுகின்றனவா என அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

 

அப்போது முக கவசம் அணியாமல் கோவிலுக்கு வந்திருந்த புதுமண தம்பதி உள்ளிட்டோருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு முககவசம் வழங்கியதோடு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பற்றி விவரித்தனர்.

Leave a Reply

Right Menu Icon