விஜய்க்கு சார்பதிவாளர் சங்கம் பாராட்டு..!
தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் அண்மையில் நடைபெற்ற பணியிட மாறுதல் என்பது வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் நடத்தியதற்காக பாராட்டு தெரிவித்துள்ளனர் அதோடு தமிழ்நாடு அரசுக்கு சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி உள்ளனர். புதிய அரசு பதவி ஏற்ற குறுகிய காலத்திலேயே தற்போது 215 நபர்களுக்கு பணியிட மாறுதல் வெளிப்படை தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல இனி வரும் காலங்களில் பணியிட மாறுதல் பெறாமல் இருப்பவர்களுக்கும் ஒரு நியாயமான பணியிட மாறுதல் வழங்க வேண்டும், அவர்களுக்கு இனி வரும் காலங்களில் கலந்தாய்வு மூலமாக பணியிட மாறுதல் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் சார்பதிவாளர் சங்கத்தினர் முன்வைத்திருக்கிறார்கள்.
மேலும், ஒருவர் மீது குற்றம் சாற்றப்பட்டால், அங்கே இருக்கக்கூடியவர்கள் மீதான உரிய விசாரணைக்குப் பிறகே, பணியிட மாறுதல் உள்ளிட்டவைகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தினரின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அரசுக்கு சார்பதிவாளர்கள் மூலமாக மேற்கொள்ள வேண்டிய சட்ட திட்டங்கள் அனைத்தையும் சட்டப்படி எடுத்துரைப்பதற்கு துணை இருப்பதாகவும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படியும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, பதவி உயர்வு உள்ளிட்டவை பெறாமல் கடந்த 5 ஆண்டுகளாக காத்துக் கிடப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய்க்கும் அரசுக்கும் கடிதம் அளித்துள்ளனர். மேலும், 215 நபர்களுக்கு வெளிப்படையாகவும் நியாயமாகவும் பணியிட மாறுதல் நடத்தி இருப்பதற்கு தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தினர் அரசுக்கு நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.





