தங்ககாசு மோசடி வழக்கில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கைது..!
சென்னை ராயபுரம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தங்ககாசு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். குறைந்த காசில் தங்க காசு மற்றும் வீட்டு மனை கொடுப்பதாக காவலர்களின் குடும்பத்தினரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.





