--- --:--:-- --

விமர்சனத்துக்கு பதிலாக அமைச்சர் கீர்த்தனா பகிர்ந்த போட்டோ..!

01

சிவகாசி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பதிலளிக்க தடுமாறிய மாணவி குறித்து, ஆசிரியையிடம் பேசிய காட்சி சர்ச்சையாகி வருகிறது. அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அரசுப் பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

 

 

அதேபோல, மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார். இணையத்திலும் அமைச்சர் கீர்த்தனாவுக்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

 

 

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் கீர்த்தனா நீண்ட நெடிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “இன்று சிலர், “அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்” என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல.

 

 

என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள். நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.

 

 

கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon