மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. தொடர்ச்சியாக கடந்த சில நாட்கள் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் வார தொடக்கமான நேற்று (ஜூலை 6 ) தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560க்கும், சவரனுக்கு ரூ.1120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.13,400க்கும், சவரனுக்கு ரூ.1280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,200க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.89,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





