கழிவுநீராக மாறும் கிணற்று நீர்..!
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பெருக்கெடுத்து உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் காட்டு பண்ணையார் கோயில் பகுதியில் பாதாள சாக்கடை உடைப்பால் கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது.
கழிவு நீரை வெளியேற்றி பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்ய கோரி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும் நிலத்தடி நீர் மாசடைந்து கிணறுகளில் உள்ள தண்ணீரும் கழிவு நீராக மாறி வருவதாகவும் தெரிவித்தனர்.





