பூதாகரமாக வெடிக்கும் பிரபல நடிகையின் பாலியல் புகார்..!
கேரளாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பல்வேறு நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் நடிகை சோனியா மல்கார் தனக்கு இளைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
கேரள காவல்துறையின் சிறப்பு விசாரணைகுழுவை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி பூங்குழலியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் சோனியா மல்கா புகார் அளித்துள்ளார்.
அந்த நடிகர் மன்னிப்பு கேட்டதால் புகார் அளிக்க மாட்டேன் என கூறிய நிலையில் விசாரணை குழு அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





