--- --:--:-- --

காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரசாணை வெளியீடு

EC KK

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், நகர்புறங்களில் போட்டியிலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து, அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அல்லது தொழு நோயாளியாக இருந்தால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று, இதுவரை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி சென்னை மாநகராட்சி முனிசிபில் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டு, கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

 

தற்போது, அந்த சட்ட திருத்தை செயல்படுத்துவம் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், நகர்புறங்களில் போட்டியிட முடியும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon