--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

4

நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறியுள்ளது.

 

அதேபோல, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை மிதமான மழை பெய்யும் எனக் கணித்துள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 18ஆம் தேதி வரை மிதமான மழை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரையில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ள வானிலை மையம், வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வரும் ஞாயிறு வரை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon