ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே முதலீடுகளை ஈர்க்க தொடங்கிவிட்டோம்: அமைச்சர் கீர்த்தனா
த.வெ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை தொடங்கிவிட்டோம் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற, ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ பேசிய அவர், புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க 21 நாட்களில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்படுவதாகவும், புதிய நிறுவனங்கள் விரைவில் தொழில் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். 2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை முதல்வர் விஜய் நிர்ணயித்துள்ளதாகவும் அமைச்சர் கீர்தனா பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




