பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வுக் குழு – அதிகாரிகள் ஆய்வு
பொன்மணி ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவினர் பழனி தேவஸ்தானத்தில் ஆலோசனை நடத்தினர். கோயில் சொத்துகள், வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோயில் மற்றும் உப கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அனைத்து கோயில் சொத்துகளும் மீண்டும் சரிபார்க்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொன்மணி ஐ.ஏ.எஸ்., துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புடன், கோயில் சொத்துகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




