ஒரகடம் டைம்லர் ஆலை விரிவாக்கம் : ரூ.4,000 கோடி முதலீடு, 400 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026-ல் ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் (Daimler) நிறுவனத்துடன் மிக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் இயங்கி வரும் தனது 400 ஏக்கர் பரப்பிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சுமார் ரூ.4,000 கோடி முதலீட்டில் இந்நிறுவனம் மேம்படுத்த உள்ளது.இதன் மூலம் வணிக வாகனங்களின் வடிவமைப்பு, ஆராய்சி, மேம்பாடு மற்றும் உற்பத்திப் பணிகள் விரிவுபடுத்தப்படுவதோடு, 400 பேருக்கு புதிய வேலைவாய்புகளும் உருவாக்கப்பட உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




