--- --:--:-- --

சாக்கடை தலைமுறை என்று விமர்சிக்கவில்லை – கங்கனா ரனாவத் விளக்கம்

5

ட்டுமொத்த இளைஞர் தலைமுறையை ‘சாக்கடை தலைமுறை’ என்று தான் விமர்சிக்கவில்லை என நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் நடத்தை, ஆடைகள் மற்றும் மொழியைக் குறிப்பிட்டு, அவர்களை மேல்நாட்டு சிந்தனை கொண்ட ’சாக்கடை தலைமுறைகள்’ என கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

 

இந்நிலையில், தான் அனைத்து இளைஞர்களையும் ’சாக்கடை தலைமுறை’ என விமர்சிக்கவில்லை என விளக்கம் தந்துள்ளார். அதேநேரம், தங்களை கரப்பான்பூச்சி என்று கூறுபவர்கள் சாக்கடையில் வாழாமல் வேறு எங்கு வாழ்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

 

 

“எல்லா இளைஞர்களும் சீரழிந்த நிலையில் இருப்பதாகவா நான் கூறினேன்? நான் குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது சில பெண்களைப் பற்றித்தான் குறிப்பிட்டேன்.” என்றும் கங்கனா விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில், விரைவில் ஜந்தர் மந்தர் சீசன் 2.0 ஆரம்பமாகும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon