தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது
தமிழ்நாட்டிற்குச் சொட்டு நீர் கூடத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டம் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மைசூரு, கொப்பால், அத்திப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னடச் சலவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை பெங்களூருவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள போதிலும், எல்லையோரப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஓசூர் வழியாகப் பெங்களூருவுக்கு வழக்கம்போல் தமிழ்நாட்டுப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





