பெரம்பூரில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து ரயில் மூலமாகச் சென்னைக்குப் பெருமளவிலான கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஆந்திராவிலிருந்து வந்த ரயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் இறங்கிய நபரைப் பிடித்துக் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், அவரிடமிருந்த பையில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், கைதான நபர் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளியான கார்த்திக் என்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து மேலதிக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




