உயிருள்ள குழந்தையை போலவே தத்ரூபமாக பொம்மையை வடிவமைக்கும் பெண்..!
மத்திய கிழக்கு நாடான ஈரானில் உயிருள்ள குழந்தையைப் போல தத்ரூபமாக பொம்மைகளை இளம்பெண் ஒருவர் வடிவமைத்துள்ளார். தலை நகர் டெக்ரானில் வசிக்கும் 24 வயது மரியம் என்பவர் வீட்டில் ஓய்வு நேரத்தில் அழகிய பொம்மையை வடிவமைத்தார்.
கண், காது, மூக்கு, தொண்டை, தலை தலைமுடி என அனைத்தையும் அச்சு அசலாக உயிருள்ள குழந்தையைப் போலவே அமைந்திருந்தது. இந்த அழகிய பொம்மைக்கு தலைசீவி உடை உடுத்தி அழகு பார்க்கும் மரியமிடம் இது போன்ற குழந்தை பொம்மைகளை தயாரித்துத் தருமாறு வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இது வியாபாரம் அல்ல பொழுதுபோக்கு என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.






