--- --:--:-- --

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!

2

துரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான ராஜலட்சுமி பயர் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தில் முநூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர் .

 

ஊரடங்கால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தியில் தீவிரம் காட்டி வந்தனர். மதியம் 2 மணி அளவில் பட்டாசு ஒன்றில் மருந்தை தினிக்கும்போது உராய்வு ஏற்பட்டு தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

 

அந்த தீப்பொறி மளமளவென அருகிலிருந்த பட்டாசுகளுக்கும் பரவி அவை வெடிக்க தொடங்கின .இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உள்ளே பணியில் இருந்தவர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

 

5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon