புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல்..!
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் நலனுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டில் 119 கோடி ரூபாய் மதிப்பில், கள்ளக்குறிச்சியில் 104 கோடி ரூபாய் மதிப்புள்ள அலுவலகங்கள் அமைகின்றன.
ஏற்கனவே ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






