தலைகீழாக குறைந்த தங்கம் விலை..!
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுக்கும் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,700க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வார தொடக்கமான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560க்கும், சவரனுக்கு ரூ.1120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





