கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்க – டி.டி.வி தினகரன்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாட்டு விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகளை செய்யும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




