--- --:--:-- --

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்..!

8

ன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 550 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

 

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். எனவே அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் இரண்டு கண்டெய்னர் லாரிகளில் 550 வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னர் அதிகாரிகள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

 

Right Menu Icon