யார் தலைமை என்பது முக்கியமல்ல; தேசிய கட்சியை சுற்றியே கூட்டணி அமைக்க முடியும் – ப. சிதம்பரம்
பா.ஜ.க-வை எதிர்க்க இந்தியா கூட்டணியை தவிர வேறு அணி கிடையாது. மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸைவிட வலிமையானவை என்பதை மறுக்கவில்லை. யார் தலைமை என்பது முக்கியமல்ல, தேசிய கட்சியை சுற்றியே கூட்டணி அமைக்க முடியும்.
காங்கிரஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அனுசரித்து செல்வது அவசியம். 2029 தேர்தலை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி தேவை என புதிய தலைமுறை நேர்காணலுக்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.





