போலி மருத்துவம் பார்த்த சித்த வைத்தியர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
அரியலூர் மாவட்டம் திருமானூரில் பெண்ணுக்கு போலி மருத்துவம் பார்த்த சித்த மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சித்த வைத்தியர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த தங்கம் என்பவர் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்க சென்றுள்ளார்.
அப்பொழுது சித்த வைத்தியர் அந்த பெண்ணிற்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஊசி போட்ட இடத்தில் சீல் உண்டாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.





