இந்தியாவில் கொரொனா பரிசோதனை 10 கோடியை தாண்டியுள்ளது..!
இந்தியாவில் கொரொனா பரிசோதனை 10 கோடியை தாண்டியுள்ளது. அதேநேரம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 77 லட்சத்து 66 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரொனாவால் பாதிக்கப் பட்டவர்கள் 69 லட்சத்து 48 ஆயிரத்து 497 பேர் குணம் பெற்று வீடு திரும்பிய நிலையில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 59 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நோய் தொற்றால் இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 306 பேர் உயிரிழந்துள்ளனர்.






