கடலூர் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து… பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி மு க ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படுமென முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
கிரிம்சன் ரசாயன ஆலை ஏற்பட்ட விபத்தில் வண்டிபாளையத்தை ராஜ்குமார், செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணபதி, காரைக்காடு சபிதா, புவனகிரி பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் ஆகிய 4 பேர் பலியானார்.

மேலும்பத்துக்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





