--- --:--:-- --

கல்லார்குட்டி அணைத் திறப்பு: பெரியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

9

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், கள்ளார்குட்டி (Kallarkutty Dam) அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) அணையின் 5 மதகுகளையும் 6 அடி உயரத்திற்கு உயர்த்தி உபரி நீரை வெளியேற்றி வருகிறது.

 

 

அணையிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பெரியாற்றின் கரையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு மாறுவது உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon