--- --:--:-- --

திருவாடானை ஆஞ்சநேயர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை..!

12

திருவாடானை ஆஞ்சநேயர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி மாத  சனிக்கிழமையன்று, ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர், வெற்றிலை மற்றும் துளசி  மாலையாக அலங்கரித்து, தீபாராதனைகள் காட்டப்பட்டன.

 

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரின் திருவருளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று, தங்கள் வாழ்வு செழிக்கப் பிரார்த்தித்தனர்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இறைவனை தரிசித்து, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon