பட்ஜெட் அறிக்கையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் வினோத்
வேளாண் நிதிநிலை அறிக்கையின் வரைவு நகலைத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து, புதுச்சேரி வேளாண் அமைச்சர் வினோத் சாமி தரிசனம் செய்தார். பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சுவாமி பாதங்களில் வரைவு அறிக்கையை வைத்து ஆசி பெறுவதற்காக அவர் திருமலைக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
வருகின்ற ஆகஸ்ட் 6-ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் முறைப்படி தாக்கல் செய்யப்படவுள்ளது



