பிரதமரே மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கணும் – ராகுல் காந்தி
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தன் குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோரின் வேதனையை விட கொடுமையானது எதுவும் இல்லை. மாணவர்களை மன்னிப்பதாக கூறுவதற்கு பிரதமர் மோடிக்கு எவ்வளவு தைரியம்? நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரையோ, குழந்தையை இழந்த ஒரு பெற்றோரையோ அவர் நேரில் சந்தித்து பேசியதில்லை. மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் மன்னிப்பு தேவையில்லை; அவர்தான் மாணவர்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



