கொளத்தூரில் தேர்தல் முறைகேடு – தி.மு.க.வின் என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சரிபார்த்த 8 இயந்திரங்களில் 3-ல் பிரச்சனை உள்ளது தெரியவந்துள்ளது.
மின்னணு வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளன. முகவரி அட்டை புதிதாக உள்ளது. இ.வி.எம் இயந்திரத்தை சீல் வைத்ததில் குளறுபடி நடந்துள்ளது. இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தி.மு.க-வின் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.



