முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்..!
பீகாரில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு புறப்பட்ட முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்கரா எனும் இடத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு ஹெலிகாப்டரை நோக்கி சென்றபோது அவரை நோக்கி காலனி வீசப்பட்டது. நல்லவேளையாக நிதிஷ் மீது படவில்லை. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் பரப்புரையின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இது தனது அரசியல் எதிரிகளின் தரம் தாழ்ந்த செயல் என்று நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.






