ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஹத்ராஸ் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை உத்திர பிரதேச காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்றும் எனவே நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மேலும் விசாரணையை உத்திரப்பிரதேசத்தில் நடத்தாமல் டெல்லியில் நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.






