--- --:--:-- --

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஓட்டப்பட்ட சுவரொட்டிகள்..!

2

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் செங்கோட்டையனை வரவேற்று சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

அரண்மனை வாசல் கோர்ட் வாசல் காந்திவீதி, மேல ரக வீதி, வாரச்சந்தை சாலை உள்ளிட்ட சிவகங்கை முக்கிய வீதிகளில் ஏராளமான சுவரொட்டிகள் காணப்படுகின்றன. எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் புகழை மறைத்து தன்னை மட்டும் ஒன்றிணைப்படுத்த இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வாசகங்களிடம் பெற்றுள்ளனர்.

 

அதே நேரத்தில் உரிமை குரலை வெளிப்படுத்திய செங்கோட்டையனை வரவேற்பதாகவும் வாசகங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் என்று குறிப்பிட்டு இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 

Right Menu Icon