--- --:--:-- --

விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா?

01

வெக தலைவரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய், நடந்து முடிந்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

 

இந்த தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்று கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார்.

 

 

அந்தப் பதிவில், “திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பல ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு என் ஊடக நண்பர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அதிகமாக பேசப்படும் நிலையில், இதுபற்றி நான் நேரடியாக ஒரு விஷயத்தை பகிர விரும்புகிறேன்.

 

 

தற்போது நான் Benz திரைப்படப் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். என் படப்பிடிப்பு ஜூன் 10-ஆம் தேதி முடிவடைகிறது. என் தாயாரின் ஆசீர்வாதத்துடன், என் வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கியமான முடிவை ஜூன் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

 

 

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது Benz திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து ஹீரோவாக மாறிய லாரன்ஸ் முதலமைச்சர் விஜய்க்கு நெருங்கிய நண்பரும்கூட. இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். அந்த நட்பில் லாரன்ஸ் தவெகவில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் வரும் 11ஆம் தேதி அதற்கு விடை கிடைக்கவுள்ளது.

Leave a Reply

Right Menu Icon