மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வில் இணைப்பார் – இ.பி.எஸ்ஸை சாடிய நிர்மல்குமார்
அ.தி.மு. தலைமை எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்திருப்பீர்கள். அடுத்த ஒரு சில வருடங்களில் எடப்பாடிக்கு மத்திய அமைச்சர் பதவியை பா.ஜ.க கொடுத்தால் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுடன் இணைக்கும் பணியை அவர் தயங்காமல் செய்வார்.
தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தி.மு.க-வோடு கூட்டணி வைக்க நினைத்த எடப்பாடி அடுத்து என்ன செய்வார். எப்படி நம்பி பயணிக்க முடியும்? என்று அ.தி.மு.க தொண்டர்கள் கேட்கிறார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.





