--- --:--:-- --

மாமல்லபுரத்தில் தவெக பொதுக்குழு கூட்டம்..!

1

வெக பொதுக்குழு கூட்டத்தை மாமல்லபுரம் அருகே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பிப்.2 ஆம் தேதி நடிகர் விஜய், தனது புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினை அதிகார பூர்வமாக அறிவித்தார்.

 

அதன் பிறகு கடந்தாண்டில் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் மாநாட்டையும் விஜய் நடத்தியிருந்தார். கட்சி தொடங்கிய ஓராண்டை அண்மையில் கொடியேற்றி கொண்டாடிய விஜய், பொதுக்குழு நடத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ள கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.YMCA மைதானத்தில் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி கேட்கப்பட்டதாகவும், ஆனால், நிகழ்ச்சி நடத்த ஆட்சேபம் இல்லை என காவல்துறை அளிக்கும் சான்றிதழை முன்கூட்டியே வழங்க வேண்டும் என கூறி அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

எனவே, ஒய்எம்சிஏவுக்கு மாற்றாக வேறொரு இடத்தில் கட்சியின் பொதுக்குழுவை நடத்துவதற்கான பணிகளில் ஆனந்த், ஜான் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் மாமல்லபுரம் அருகே பொதுக்குழுவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Right Menu Icon