பாஜகவில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த அண்ணாமலை
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி உள்ள நிலையில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே இன்று மதியம் 12 மணிக்கு சமூக வலைதளம் மூலமாக மனம் திறப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகியது ஏன், புதிய கட்சி தொடர்பான அறிவிப்புகளை சமூக வலைதளம் மூலமாக அண்ணாமலை வெளிப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், வெளியே சென்றாலும் மரியாதை உடன் சொல்லிவிட்டு செல்வது தமிழரின் மரபு. இன்று முதல் புதிய பாதையில் பயணம் செய்ய உள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க நான் பாடுபட்டேன். பாஜகவில் இணையும் பொழுது ரஜினிகாந்த் என்னை வாழ்த்தினார். பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பு என்னை அவரின் இயக்கத்தில் இணைய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அதை மறுத்துவிட்டு பாஜகவில் இணைந்தேன் என்றார்.
ஆனந்தமாக தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கும், வித்தியசமான கட்சியை தொடங்க உள்ளேன். தமிழ்நாட்டில் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும். அடுத்த தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். எனது கட்சியில் யாருக்கும் நிரந்தர தலைவர்கள், பதவிகள் இருக்காது. அமைச்சர்கள் தொடங்கி எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் என யாருக்கும் நிரந்தர பதவி கிடையாது. நாம் அனைவரும் சாமானிய மக்கள் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும்.
கோவையில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி வழங்கப்படும். எனது அரசியல் இயக்கத்தில் சேர www.wetheleader.org என்ற தளத்தில் இணையலாம். cult politics-ல் வெளியே வர வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.





