பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு..!
ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கிய நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறை விடுப்பு வருகிற 9ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் சூழலில் சிகிச்சைக்காக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட சிறை விடுப்பை மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது வருகிற 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.






