--- --:--:-- --

யாரையும் காயப்படுத்தாமல் கட்சி நடத்த ரஜினிகாந்தால் மட்டுமே முடியும் : ராகவா லாரன்ஸ்

6

திர்மறை இல்லாமல் யாரையும் காயப்படுத்தாமல் கட்சி தொடங்க முடியும் என்றால் அது ரஜினிகாந்த்தால் மட்டுமே சாத்தியம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

 

தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் லாரன்ஸ் அரசியலுக்கு வருவதற்காக சமூக சேவை செய்கிறீர்களா என்று பலர் தம்மிடம் கேட்பதாக கூறி இருக்கும் அவர் சாதாரண மனிதனாகவே மக்களுக்கு உதவி செய்து வருவதாக கூறியுள்ளார்.

 

எதிர்மறை இல்லாமல் யாரையும் காயப்படுத்தாமல் கட்சி தொடங்க முடியும் என்றால் அது ரஜினி காந்தால் மட்டுமே முடியும் என்றும் அவர் ஆன்மீக அரசியல் தொடங்கினால் அவரின் பல லட்சம் தொண்டர்களுள் தானும் ஒருவராகத்தான் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சேவை செய்யக் காத்துக் கொண்டிருப்பதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon