--- --:--:-- --

இந்திய – சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக நீண்ட ஆலோசனை..!

7

ந்திய சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் ரஷ்யாவில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த மே மாதம் சீனப் படைகள் அத்துமீறலில் ஈடுபட்ட தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் ரஷ்யா சென்றிருக்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் சிங்கை சந்தித்துப் பேசினார்.

 

லடாக் எல்லை பிரச்சனைக்கு பிறகு இரு நாடுகளிடையே முதன்முறையாக உயர்மட்ட அளவில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மாஸ்கோவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை பாதுகாப்புத்துறை செயலாளர் அஜயக்குமார் மற்றும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

 

பேச்சுவார்த்தையின்போது கிழக்கு லடாக்கில் நிலைமைகளை மீட்டெடுக்கவும் துருப்புகளை விரைவாக வெளியேற்றவும் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் கிழக்கு கரையில் இந்தியப் பகுதிகளை சீனா கைப்பற்ற முயற்சி செய்வதற்கு ஆட்சேபனை தெரிவிக்க பட்டதாகவும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

 

முன்னதாக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் அமைதி நிலவ வேண்டுமானால் ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது என்றார்.

Leave a Reply

Right Menu Icon