--- --:--:-- --

ஊரடங்கை முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்படும்!

8

கொரொனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரா இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கொரொனா பாதிப்பு சற்று குறைந்திருப்பதாக கருதப்பட்டாலும் 16 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் சமூக பரவல் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது என்றார்.

 

கொரொனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாடுகள் அவசரப்பட்டு முன்கூட்டியே நடத்தக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .நோய்களை கண்டறிவது, வருமுன் தடுப்பது போன்றவற்றை சசெய்ய தவறுவதால் மிகப் பெரிய பாதிப்புகளை எதிர் கொண்டு வருவதாக கூறிய அவர் எந்த நாடும் வலுவான சுகாதார அமைப்பை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

 

ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் 25 மில்லியன் என்95 முகக் கவசங்கள் செயற்கை சுவாச கருவிகள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்ப வேண்டி இருப்பதாக கூறியவர் 747 விமானங்கள், 8 நடுத்தர ரக விமானங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பயணிப்பதற்கான எட்டு சிறிய ரக பயணிகள் விமானங்களை ஈடுபடுத்த இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon