--- --:--:-- --

துதி பாடும் இடமல்ல சட்டப்பேரவை – த.வெ.க-வினர் செயல்பாட்டிற்குப் பிரேமலதா கண்டனம்

3

மிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியான த.வெ.க-வினர் தங்களது தலைவரைத் துதி பாடிப் பேசுவதற்கும், அவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

 

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவையில் த.வெ.க-வினர் தங்களது தலைவரை அளவுக்கு அதிகமாகத் துதி பாடுகின்றனர்; கட்சிகள் தங்களது தலைவரைத் துதி பாடும் இடமல்ல சட்டமன்றம்” என்று சாடியுள்ளார். மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொதுமக்கள் வரிப் பணத்தில் நடக்கும் அவையின் நிகழ்வுகளை அவர்கள் பார்க்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார்.

 

 

அலைகள் ஓய்வதில்லை என்பது போல் இங்குப் பிரச்சினைகள் ஓய்வதில்லை; ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என்று தற்போதைய விஜய் தலைமையிலான அரசை விமர்சித்த பிரேமலதா, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்துப் பதில் உரையில் முதல்வர் பேசுவாரா என்று பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon