--- --:--:-- --

ராகுல் காந்தி பிறந்தநாள் – விஜய் வாழ்த்து

8

ன்று (ஜூன் 19, 2026) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக வாழ்த்துச் செய்தி பகிர்ந்துள்ளார். அதில், “எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்”எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon