தம்பி விஜய்யைப் பாராட்டுகிறேன் – மேகதாது தனித்தீர்மான வெற்றிக்கு கமல் ஹாசன் வாழ்த்து
தமிழகச் சட்டமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணை எதிர்ப்புத் தனித்தீர்மானம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் எம்பி மனதாரப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த விவகாரத்தில், அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.





